Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இட்லிக்கு 15 நிமிஷத்துல இப்படியொரு மட்டன் குழம்பு செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Mutton Kuzhambu Without Coconut In Tamil: விடுமுறை நாட்களில் அதுவும் மழை பெய்யும் காலத்தில் காலையில் நன்கு சூடாக இட்லியை சுட்டு, அதற்கு காரசாரமாக மட்டன் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் அல்லவா? உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரி மட்டன் குழம்பு செய்து போடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் தேங்காய் எதுவும் சேர்க்காமல் மட்டன் குழம்பு செய்ய வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மட்டன் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சேர்க்காத மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்க்காத மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* மட்டன் - 1/2 கிலோ
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* எலுமிச்சை - பாதி
குழம்பிற்கு...
* வெங்காயம் வதக்கிய மீதமுள்ள எண்ணெய்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி,
அந்த வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் இருந்து வடிகட்டி எடுத்து, குளிர
வைத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் மட்டனை கழுவி எடுத்துக் கொண்டு, அத்துடன்
அரைத்த வெங்காய விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்
தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள்
தூள், மிளகுத் தூள், புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, அத்துடன்
பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம் வதக்கிய
எண்ணெயை ஊற்றி, அத்துடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதங்கியதும், ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறி
விட வேண்டும்.
* பின் ஒரு தட்டு கொண்டு மூடி வைத்து, 10 நிமிடம் மட்டனை நீர்விட்டு
வரும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி மிதமான தீயில் வைத்து 6-7 விசில் விட்டு இறக்கினால், சுவையான
மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications


