Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
சுவையான... மட்டன் நெய் சோறு
இந்த வார விடுமுறையில், சற்று வித்தியாசமான அதே சமயம் மட்டன் பிரியாணிக்கு இணையான சுவையைத் தரும் மட்டன் நெய் சோறு செய்து சுவைத்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.
நாம் அனைவருமே நெய் சோறு சுவைத்திருப்போம். பொதுவாக நெய் சோறு செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவியைத் தொட்டுக் கொள்வோம். ஆனால் இந்த வார விடுமுறையில், சற்று வித்தியாசமான அதே சமயம் மட்டன் பிரியாணிக்கு இணையான சுவையைத் தரும் மட்டன் நெய் சோறு செய்து சுவைத்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

மட்டன் நெய் சோறுக்கு சிறந்த சைடு டிஷ் என்றால் அது வெங்காய பச்சடி தான். இப்போது மட்டன் நெய் சோறு எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 2 கப்
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 5
* கிராம்பு - 5
* பட்டை - 1 சிறு துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 2 துண்டு
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 6-7 (நீளமாக கீறிக் கொள்ளவும்)
* தண்ணீர் - 2-3 கப்
* நெய் - 1/4 கப்
* முந்திரி - ஒரு கையளவு
* உலர் திராட்சை - சிறிது
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா இலைகள் - 1 கப்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்து நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின் மட்டனை சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்கவும். இப்போது குக்கரில் ஒரு கப் அளவு நீர் இருக்கும். அத்துடன் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு 5 நிமிடம் உயர் வெப்பநிலையில் நன்கு நீரைக் கொதிக்க விடவும். பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதை குக்கரில் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் நெய் சோறு தயார்.



Click it and Unblock the Notifications