Just In
- 13 min ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 5 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Don't Miss
- News
படுக்கை அறை வரை நுழைந்த "கறுப்பு ஆடு"! இம்ரான் கானை கொல்ல பெரிய சதி? கடைசி நேரத்தில் பரபர சம்பவம்
- Sports
இந்திய அணியில் அதிகரிக்கும் கொரோனா.. டிரெஸிங் ரூம்மில் என்ன பிரச்சினை.. பயோ பபுள் இல்லாததால் சிக்கல்
- Finance
ரஷ்யாவின் ஒற்றை நடவடிக்கை.. 40 - 50 மில்லியன் மக்களை பசியில் ஆழ்த்தும்
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மட்டன் தால்சா
விடுமுறை வந்தாலே நம் அனைவருக்கும் குஷி தான். ஏனெனில் அன்று நமக்கு பிடித்தவாறு எதையும் சமைத்து சாப்பிடலாம். அதுவும் சமையலில் ஆர்வம் கொண்டவர்கள் விடுமுறை நாட்களில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிப்பார்கள். நீங்கள் இந்த வார இறுதியில் மட்டன் எடுப்பதாக இருந்தால், அந்த மட்டனைக் கொண்டு தால்சா செய்யுங்கள். இந்த மட்டன் தால்சா வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு மட்டன் தால்சா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் தால்சாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* சின்ன வெங்காயம் - 12
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 2
* மட்டன் - 1/2 கிலோ
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கடலை பருப்பு - 1/4 கப்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லி தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கத்திரிக்காய் - 1
* மாங்காய் - 1/2
* புளிச்சாறு - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், காய்கறிகளான கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.
Image Courtesy: steffisrecipes