Latest Updates
-
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Mutton Biryani In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் மட்டன் பிரியாணியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் பிரியாணி செய்தால், எப்போதும் ஒரே மாதிரி தான் பிரியாணி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பிரியாணி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இப்படி மசாலா அரைத்து பிரியாணி செய்யுங்கள். இந்த பிரியாணி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 1 டம்ளர் (ஊற வைத்துக் கொள்ளவும்)
அரைத்து பொடி செய்வதற்கு...
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 4
* பட்டை - 3 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* ஜாவித்திரி - 1
* பிரியாணி இலை - 2
* கல்பாசி - சிறிது
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 8
மசாலா விழுது அரைப்பதற்கு..
* பச்சை மிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 2
* இஞ்சி - 1 பெரிய துண்டு
* பூண்டு - 8 பல்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
மட்டன் வேக வைப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த பேஸ்ட்
* புளிப்பில்லாத தயிர் - 1/4 கப்
* அரைத்த மசாலா பவுடர்
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - 3/4 டம்ளர்
பிற பொருட்கள்...
* வேக வைத்த மட்டன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* ஊற வைத்த சீரக சம்பா அரிசி
* எலுமிச்சை - 1/2
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்ககாய்,
அன்னாசிப்பூ, ஜாவித்திரி, பிரியாணி இலை, கல்பாசி, மல்லி, சீரகம்,
மிளகு, சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பொடியாக தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு,
கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து
பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெயை
ஊற்றி சூடானதும், அரைத்த பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, அரைத்த மசாலா பவுடரை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1/2 கிலோ மட்டனை கழுவி சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி
விட்டு, 3/4 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி வைத்து, 5 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை பிரியாணி பாத்திரத்தில்
ஊற்றி, அத்துடன் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், ஊற வைத்த சீரக சம்பா அரிசியை கழுவி சேர்த்து, பாதி
எலுமிச்சை சாற்றினை பிழிந்து கிளறி, மூடி வைத்து 5-6 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து, அதன்
மேல் ஒரு கனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து, குறைவான தீயில்
வைத்து 20 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, 45 நிமிடம்
கழித்து மூடியைத் திறந்தால், சுவையான மட்டன் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications