Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கல்யாண பந்தி முட்டைக்கோஸ் உருளை மசாலா ரெசிபி... ஒருதடவை இப்படி செய்யுங்க... சூப்பர் சைடிஷா இருக்கும்...!
Muttaikose Urulai Poriyal Recipe in Tamil: 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று கூறுவார்கள், ஆனால் சைடிஷ் இல்லாத உணவும் குப்பையில்தான். மதியம் சாம்பார், ரசத்துக்கு சிம்பிளான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அதோடு கொஞ்சம் முட்டைக்கோஸ்உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் சேர்த்து ஒரு கல்யாண பந்தி ஸ்டைலில் ஒரு அருமையான பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு முட்டைக்கோஸ் பொரியல் சாம்பார், ரசம் சாதத்துடன் மட்டுமின்றி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் இதனுடன் பட்டாணியும் சேர்த்து செய்யலாம். இது இந்த பொரியலின் சுவையை மேலும் அதிகரிக்கும். இந்த பொரியல் டக்கென்று செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த பொரியல் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமாக இருக்கும். முட்டைக்கோஸ் பொரியல் பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு மசாலா பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 200 கிராம் முட்டைக்கோஸ்
- 4 பெரிய உருளைக்கிழங்கு
- ¼ கப் பச்சை பட்டாணி
- தேவையான அளவு உப்பு
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலை
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் தனியாத்தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 பச்சை மிளகாய்
-1 கொத்து கறிவேப்பிலை
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை:
- உருளைக்கிழங்குகை சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் ஊறவைக்கவும். முட்டைக்கோஸை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், சீரகம் சேர்த்து அது வெடிக்கத் தொடங்கும் வரை விடவும்.
- பின்னர், கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து, நன்றாக கிளறவும். பாத்திரத்தை மூடி, உருளைக்கிழங்குகள் 90% வேகும் வரை மிதமான தீயில் சமைக்கவும். உருளைக்கிழங்குகள் கருகாமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடவும்.
- உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- பாத்திரத்தை மூடி வைத்து, சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வரை மிதமான தீயில் சமைக்கவும். பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளாமலோ அல்லது கருகிவிடாமலோ இருக்க, இடையில் அவ்வப்போது கிளறிவிடவும்.
- முட்டைக்கோஸ் முழுமையாக வெந்ததும், புதிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கல்யாண பந்தி முட்டைக்கோஸ் உருளை மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications