Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சப்பாத்திக்கு அட்டகாசமான சைடு டிஷ் செய்யணுமா? அப்ப முட்டை சால்னா செய்யுங்க...
உங்கள் வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? வீட்டில் முட்டை இருந்தால், அந்த முட்டையைக் கொண்டு ஒரு அட்டகாசமான முட்டை சால்னா செய்யலாம். இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? வீட்டில் முட்டை இருந்தால், அந்த முட்டையைக் கொண்டு ஒரு அட்டகாசமான முட்டை சால்னா செய்யலாம். இந்த முட்டை சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னாவை செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் செய்யும் வகையில் எளிய செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு முட்டை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* முட்டை - 3
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, மிளகு, பட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, அதில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
* சால்னா நன்கு கொதித்ததும், அதில் அடித்து வைத்துள்ள முட்டைகளை ஊற்றி கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை சால்னா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











