Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
காளான் சூப்
நீங்கள் சூப்பை விரும்பி குடிப்பவரா? தினமும் உங்களின் உணவில் சூப் இருக்குமா? உங்களுக்கு காளான் சூப் ரொம்ப பிடிக்குமா? இதுவரை கடைகளில் தான் காளான் சூப்பை வாங்கி குடித்திருப்பீர்கள். அதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
நீங்கள் சூப்பை விரும்பி குடிப்பவரா? தினமும் உங்களின் உணவில் சூப் இருக்குமா? உங்களுக்கு காளான் சூப் ரொம்ப பிடிக்குமா? இதுவரை கடைகளில் தான் காளான் சூப்பை வாங்கி குடித்திருப்பீர்கள். ஆனால் அதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அதுவும் உங்களுக்கு ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கும் க்ரீமி சூப் பிடிக்குமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும்.

உங்களுக்கு க்ரீமி காளான் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வெங்காயம் - 1/2
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* கார்ன் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
க்ரீமிக்கு தேவையானவை...
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* பால் - 2 கப்
* உப்பு மற்றும் மிளகுத் தூள்
செய்முறை:
* முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காளானை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். காளான் மென்மையானதும், பச்சை பட்டாணி, கார்ன் சேர்த்து நன்கு கிளறி, பின் மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து குறைவான தீயில் வைத்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போக கிளற வேண்டும்.
* பிறகு பாலை ஊற்றி கெட்டியாக விட வேண்டும். பால் கெட்டியானதும், வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறி கொதிக்க விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காளான் சூப் தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
