Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
வித்தியாசமான சுவையைக் கொண்ட மஸ்ரூம் பாப்பர்ஸ்..
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் காளான் மற்றும் சீஸ் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம். அது தான் மஸ்ரூம் பாப்பர்ஸ்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் காளான் மற்றும் சீஸ் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாம். அது தான் மஸ்ரூம் பாப்பர்ஸ். இது நன்கு சீஸியாக இருப்பதால், மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளின் பசியை ஆற்றும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டை பெறலாம்.

உங்களுக்கு மஸ்ரூம் பாப்பர்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஸ்ரூம் பாப்பர்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 20
* க்ரீம் சீஸ் - 1/4 கப்
* மொசரெல்லா சீஸ் - 1/2 கப்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
* மைதா - 1 கப்
* சோள மாவு - 1/4 கப்
* மைதா - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* பிரட் தூள் - 2 கப்
செய்முறை:
* முதலில் முழு காளானை எடுத்து, அதன் தண்டு பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டும். அந்த தண்டு பகுதியை தூக்கிப் போடாமல், அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் க்ரீம் சீஸ், மொசரெல்லா சீஸ், உப்பு, மிளகுத் தூள், பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய காளான் தண்டுகளை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு காளானை எடுத்து, அதனுள் சீஸ் கலவையை வைத்து நிரப்ப வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் 1 கப் மைதா, 1/4 கப் சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து, நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு சீஸ் நிரப்பிய காளான் ஒன்றை எடுத்து, அதை மைதா மாவில் பிரட்டி, பின் நீர் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் பிரட்ட வேண்டும். அதன் பின் பிரட் தூளில் பிரட்ட வேண்டும்.
* பின்னர் மீண்டும் நீர் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, மீண்டும் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் செய்து, ஃப்ரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மஸ்ரூம் பாப்பர்ஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
