Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... காளான் அவல் கட்லெட்
உங்கள் குழந்தைகள் கட்லெட்டை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று அவர்களுக்கு காளான் அவல் கட்லெட் செய்து கொடுங்கள். இந்த காளான் அவல் கட்லெட் செய்வது மிகவும் சுலபம்.
மாலை வேளையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பும் வகையில் மற்றும் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள் கட்லெட்டை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று அவர்களுக்கு காளான் அவல் கட்லெட் செய்து கொடுங்கள். இந்த காளான் அவல் கட்லெட் செய்வது மிகவும் சுலபம் மற்றம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு காளான் அவல் கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் அவல் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பட்டன் காளான் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* அவல் - 1/2 கப்
* பச்சை பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கையளவு
* பிரட் தூள் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அவலை நீரில் ஒருமுறை கழுவி விட்டு, பின் நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, நீரை முழுவதுமாக வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கி கலவையானது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அத்துடன் நறுக்கிய காளான், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மாங்காய் தூள், அவல் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கையால் பிசைய வேண்டும்.
* அடுத்து சிறிது அவல் கலவையை எடுத்து உருட்டி, அதை தட்டையாக கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து கலவையையும் தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள ஒரு கட்லெட்டை எடுத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் கட்லெட்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான காளான் அவல் கட்லெட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
