Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
காளானை ஒருமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. சிக்கன், மட்டன் குழம்பே தோத்துப்போயிடும்...
Mushroom Kuzhambu Recipe In Tamil: காளான் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவருக்குமே பிரியமான ஒரு காய்கறியா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி சமைப்பீர்களா? அப்படி சமைக்கும் போது எப்போதும் ஒரே மாதிரி தான் காளானை சமைப்பீர்களா?
அப்படியானால் ஒருமுறை காளான் குழம்பிற்கு மசாலாவை அரைத்து செய்து பாருங்கள். இப்படி மசாலா அரைத்து குழம்பு செய்யும் போது, சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு காளான் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 1
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 5
* கல்பாசி - சிறிய துண்டு
* அன்னாசிப்பூ - 1
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* காளான் - 200 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து பொரிய விட
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனைபோக வதக்க வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 2 நிமிடம் கிளறி, குழம்பிற்கு
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால்
சுவையான காளான் குழம்பு தயார்.
Image Courtesy: Annai Samayal



Click it and Unblock the Notifications
