Latest Updates
-
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
ஒருடைம் காளானை வெச்சு இந்த மாதிரி பிரியாணி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்...
Mushroom Donne Biryani Recipe In Tamil: மழை பெய்து கொண்டிருப்பதால் உங்களுக்கு பிரியாணி சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? ஆனால், புரட்டாசி மாதம் என்பதால் மட்டன், சிக்கன் பிரியாணி சாப்பிட முடியாத நிலையில் உள்ளீர்களா? அப்படியானால் காளானை வாங்கி வந்து, பிரியாணி செய்யுங்கள்.
அதுவும் காளானை கொண்டு பெங்களூர் ஸ்பெஷல் தொன்னை பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த காளான் தொன்னை பிரியாணி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மட்டன் பிரியாணியே தோற்றுப்போகும் அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு காளான் தொன்னை பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் தொன்னை பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* முந்திரி - 5
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது
பிரியாணிக்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 4 துண்டு
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 5
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* காளான் - 350 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - பாதி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* சீரக சம்பா அரிசி - 2 கப் (1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் முந்திரி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அதன்
பின் நெய்யை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் மஞ்சள் தூள்,
கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் தயிர், அரைத்த மசாலா, தக்காளியை சேர்த்து நன்கு 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து கிளறி, 2
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி, குக்கரை மூடி, குறைவான தீயில்
வைத்து, 1 விசில் விட்டு அடுப்பை அணைத்துவிட்டு, 15 நிமிடம் கழித்து,
குக்கரைத் திறந்தால், சுவையான காளான் தொன்னை பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications