1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க..

Posted By:

Murungaikeerai Adai Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை கூட மாவு ஏதும் இல்லையா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு நல்ல சத்தான ஒரு காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரையும், பொட்டுக்கடலையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் அடை செய்து கொடுங்கள். இந்த அடை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இந்த அடை சுவையாக இருப்பது மட்டுமின்றி சத்தானதும் கூட. இந்த அடையை காலை டிபனாக மட்டுமின்றி, இரவு டின்னராகவும் உட்கொள்ளலாம்.

Murungaikeerai Adai How To Make This Delicious Breakfast Recipe

உங்களுக்கு இந்த முருங்கைக்கீரை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்

அடை மாவிற்கு..

* பொட்டுக்கடலை - 1/2 கப் (அரைத்து பொடி செய்தது)
* கோதுமை மாவு - 1/2 கப்
* ராகி மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - 1/2 டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடித்தது)
* வதக்கிய முருங்கைக்கீரை கலவை
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து, கீரை சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 முறை வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த பொட்டுக்கடலை, கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பொடித்த மிளகு, வதக்கிய முருங்கைக்கீரை சேர்த்து, அடை மாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முருங்கைக்கீரை அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 4, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion