Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
முருங்கைக்கீரையை வைச்சு இந்த மாதிரி வடை செஞ்சு கொடுங்க... சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்...!
Murungai Keerai Vadai Recipe in Tamil: மாலை வேளை வந்தாலே வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்கிறார்களா? நீங்கள் செய்யும் ஸ்னாக் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படி இருந்தால் முருங்கைக்கீரையை வைத்து சுவையான அதேசமயம் ஆரோக்கியமான வடை செய்து வீட்டில் எல்லாரையும் அசத்தலாம்.
முருங்கைக் கீரையை வைத்து வடை செய்து கொடுக்கும் போது அதனை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கைக்கீரையில் இரும்புச்சத்தும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் இது மிகவும் ஆரோக்கியமான நொறுக்குந்தீனியாக இருக்கும். இந்த பதிவில் முருங்கைக்கீரையை சேர்த்து எப்படி சுவையான வடை செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கடலை பருப்பு - 200 கிராம்
- முருங்கை கீரை - 4 கொத்து
- பெரிய வெங்காயம் - 1
- காய்ந்த மிளகாய் - 4
- இஞ்சி - சிறிதளவு (1 இன்ச் அளவு)
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- கடலை பருப்பை பாத்திரத்தில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- முருங்கை கீரையை உருவி குச்சிகள் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.
- முருங்கை கீரையில் படிந்திருக்கும் மண், தூசுகளை நீக்க பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் கீரையை கழுவி கைகளால் தனியே எடுத்து வைக்கவும்.
- கீரை வகைகளை தண்ணீரில் கழுவி வடித்தால், அதில் இருக்கும் மண், தூசிகள் தண்ணீரின் அடி பகுதியில் தங்கியிருக்கும்.
- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஊற வைத்த கடலைப்பருப்பின் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
- பின் அதனுடன் நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு, மற்றும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
- அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி நாம் அலசி வைத்த முருங்கை கீரை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின் மாவை சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து ஒரு தட்டு தட்டி தனியாக வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும் தயார் செய்து வைத்திருக்கும் மாவை எண்ணெயில் சேர்க்கவும்.
- நன்கு வேக வைத்து இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து கொள்ளவும்.
- இதே போல் மீதம் இருக்கும் மாவையும் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான முருங்கை கீரை வடை ரெடி!



Click it and Unblock the Notifications
