Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
முருங்கைக் கீரை சூப்
உங்களுக்கு மாலை வேளையில் சூப் ஏதேனும் செய்து சுவைக்க வேண்டுமானால், முருங்கைக்கீரை சூப் சிறப்பான தேர்வு. குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப்பை கொடுப்பது மிகவும் நல்லது.
சூப்புகளில் முருங்கைக்கீரை சூப் செய்வது மிகவும் சுலபம். முருங்கைக்கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. அதோடு முருங்கைக்கீரை கண்களுக்கும் நல்லது.

உங்களுக்கு மாலை வேளையில் சூப் ஏதேனும் செய்து சுவைக்க வேண்டுமானால், முருங்கைக்கீரை சூப் சிறப்பான தேர்வு. குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப்பை கொடுப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு முருங்கைக்கீரை சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
MOST READ: மீல் மேக்கர் மஞ்சூரியன்
அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருங்கைக்கீரை சூப்பின் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியைப் படித்து முயற்சித்துவிட்டு, எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 1 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முருங்கைக்கீரையை நீரில் இரண்டு முறை நன்கு அலசி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பிறகு கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின் வதக்கியதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
* சூப்பானது நன்கு கொதித்த பின், சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, பின் மிளகுத் தூள் தூவி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.
குறிப்பு:
* 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப் கொடுப்பதாக இருந்தால், சூப்பை வடிகட்டி, வெறும் நீரை மட்டும் கொடுக்கலாம்.
* முருங்கைக்கீரையை அரைத்து பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் சூப் கசப்பாக இருக்கும்.
* முருங்கைக்கீரையை எப்போதுமே மரத்தில் இருந்து பிடுங்கிய அன்றே அல்லது மறுநாள் பயன்படுத்திவிட வேண்டும்.
* இன்னும் சுவையான முருங்கைக்கீரை சூப் வேண்டுமானால், இத்துடன் 1/4 கப் தேங்காய் பால் அல்லது பருப்பு வேக வைத்த நீரை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications