Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
மீல் மேக்கர் மஞ்சூரியன்
உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் மீல் மேக்கர் மஞ்சூரியன் செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு மாலையில் கொஞ்சம் புளிப்பாக வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் மீல் மேக்கர் மஞ்சூரியன் செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இப்போது மீல் மேக்கர் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து, அதன் சுவை எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
மஞ்சூரியனுக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
* சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோள மாவு - 1/2 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்
* உப்பு - தேவையான அளவு
* ஸ்பிரிங் ஆனியன் (வெள்ளைப் பகுதி) - 1 டேபிள் ஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் (பச்சை பகுதி) - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் மீல் மேக்கரைப் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் குறைந்தது 2-3 முறை கழுவிக் கொள்ளவும்.
* பின் மீல் மேக்கரில் உள்ள நீரை பிழிந்து விட்டு தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பௌலில் சோள மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மீல் மேக்கர் அனைத்தையும் தயாரித்து வைத்துள்ள மைதா கலவையில் பிரட்டி போட்டு வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப்பகுதியைப் போட்டு சில நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி, குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் அனைத்து சாஸ்கள் மற்றும் சோள மாவை நீரில் கலந்து சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த மீல் மேக்கர், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி, ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியைத் தூவினால், சுவையான மீல் மேக்கர் மஞ்சூரியன் தயார்!



Click it and Unblock the Notifications
