Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முருங்கைக்கீரையை இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Murungai Keerai Dal Recipe In Tamil: வாரம் ஒருமுறையாவது கீரையை உணவில் சேர்த்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரை செய்தாலே சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? கீரைகளில் முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. அதே சமயம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியதும் கூட.
பொதுவாக முருங்கைக்கீரையை கூட்டு, பொரியல், சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் அந்த முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து தால் செய்யுங்கள். இப்படி செய்து, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் முருங்கைக்கீரையை செய்தால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை தால் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 100 கிராம்
* பூண்டு - 10
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* வரமிளகாய் - 5
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவி
சேர்த்து, அத்துடன் 10 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவில்
நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து
கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது பெருங்காயத் தூளையும்
சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை தால் தயார்.



Click it and Unblock the Notifications
