Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
முருங்கை கீரையை வைச்சு இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க... இரத்த சர்க்கரையும், எடையும் வேகமாக குறையும்...!
Murungai Keerai Chutney Recipe in Tamil: பொதுவாகவே கீரைகளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கும். கீரைகளை சாப்பிடுவது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிக்காது. ஏன் சில பெரியர்வர்களுக்கு கூட பிடிக்காது தான். அதிலும் கசப்பான முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, மற்றும் அகத்தி கீரைகளை முற்றிலும் சிலர் தவிர்த்து விடுவார்கள்.
அவர்களை கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பதை விட முற்றிலும் வித்தியாசமான முறையில் இப்படி சட்னி செய்தால் சாப்பிட வைப்பது எளிது. சரி வாங்க இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும், சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவும் முருங்கை கீரை சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- முருங்கைக் கீரை - 1 கப்
- காய்ந்த மிளகாய் - 6
- கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- புளி - சிறிதளவு (நெல்லிக்காய் அளவு),
- தேங்காய் - ½ மூடி
- சின்ன வெங்காயம் - 10 அல்லது 12
- தக்காளி - 1
- பூண்டு - 5 அல்லது 6 பல்
- இஞ்சி - சிறியது (ஒரு இன்ச் அளவு)
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- கடலைப் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - கொத்து
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்பபடி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- புளியை ஓடும் தண்ணீரில் ஓடு மற்றும் குப்பை இல்லாமல் அலசி எடுத்து வைத்து கொள்ளவும்.
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற விடவும்.
- மீதம் இருக்கும் எண்ணெயில் முருங்கை கீரையை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
- அதே வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கழுவி ஓடு நீக்கி வைத்த புளி மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
- வறுத்து வைத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் உடலிற்கு ஆரோக்கியமான முருங்கை கீரை சட்னி ரெடி!
- இது இட்லி, தோசை என டிபன் வகைகளுக்கும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications