Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முருகன் இட்லி கடை ஸ்பெஷல் தக்காளி சட்னி... எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Murugan Idli Kadai Tomato Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? இட்லிக்கு சட்னி தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் சற்று புளிப்பான சட்னி இன்னும் அற்புதமாக இருக்கும்.
இதனால் நிறைய பேர் இட்லிக்கு தக்காளி சட்னியையே அதிகம் விரும்புவார்கள். இந்த தக்காளி சட்னியை பலவாறு செய்யலாம். அதில் மிகவும் பிரபலமான முருகன் இட்லி கடையின் தக்காளி சட்னியின் சுவையே தனி தான். இந்த சட்னியை வீட்டில் செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருகன் இட்லி கடை தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருகன் இட்லி கடை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5- பல்
* வரமிளகாய் - 3
* தக்காளி - 1/2 கிலோ (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறிய துண்டு
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து பொரியவிட வேண்டும்.
* பின் அதில் உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வெல்லம் மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முருகன் இட்லி கடை
தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications