Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஒருமுறை இந்த முனியாண்டி விலாஸ் ரசம் வையுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க...
Muniyandi Vilas Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? உங்கள் வீட்டில் தினமும் ஒரே மாதிரியான சுவையில் தான் ரசம் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் ரசம் செய்ய நினைத்தால், முனியாண்டி விலாஸ் ரசத்தை செய்யுங்கள்.
இந்த ரசம் நீங்கள் வழக்கமாக செய்யும் ரசத்தை விட சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருக்கும். அதேப் போல் சுவையும் வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த ரசத்தை ஒருமுறை நீங்கள் செய்தால், பின் அடிக்கடி இந்த ரசத்தை தான் செய்வீர்கள்.

உங்களுக்கு முனியாண்டி விலாஸ் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முனியாண்டி விலாஸ் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
ரசத்திற்கு...
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 7-8
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் (வேக வைத்தது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 3-4
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, துவரம்
பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ரசத்திற்கு புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும். அதன் பின் பூண்டு பற்களை நன்கு தட்டி, அதை தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும். அதே சமயம் 2 டீஸ்பூன் துவரம் பருப்பை கழுவி நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, வேக வைத்து இறக்கி, மசித்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைக்க வேண்டும்.
* ரசத்தில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் துவரம்பருப்பை நீருடன்
அப்படியே ஊற்றி, அத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், சிறிது
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு
மற்றும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து, நுரைக்கட்ட விட
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* ரசம் நுரைக்கட்டி கொதிக்க தொடங்கும் முன் அடுப்பை அணைத்துவிட்டு,
அதில் தாளித்ததை ஊற்றி, 5 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால்,
சுவையான முனியாண்டி விலாஸ் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
