Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மும்பை ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
Mumbai Style Coconut Chutney Recipe in Tamil: இட்லி தமிழர்களின் உணவு முறையில் அசைக்க முடியாத பங்கு வகிக்கிறது. இட்லி தோன்றிய காலம் முதலே அதற்கு சிறந்த சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னிதான். கலர் கலராக எத்தனை சட்னிகள் இருந்தாலும் பஞ்சு போன்ற இட்லிக்கு காரமான தேங்காய் சட்னியின் இடத்தை வேறு எந்த சட்னியாலும் நிரப்ப முடியாது. தேங்காய் சட்னியையே நாம் பல்வேறு வகைகளில் டிசைன் டிசைனாக அரைத்து சாப்பிட விரும்புவோம்.

இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷனாக இருந்தாலும் அதை அரைக்கும் விதம் ஊருக்கு ஏற்றார் போல மாறும். தேங்காய் சட்னியுடன் சில பொருட்களை கூட்டியோ அல்லது குறைத்தோ ஒவ்வொரு ஊரிலும், மாநிலத்திலும் பல்வேறு வகையான தேங்காய் சட்னி அரைக்கப்படுகிறது.
அந்த வகையில் மும்பை ஸ்டைல் தேங்காய் சட்னி என்ற ஒன்று உள்ளது. இட்லி, தோசை மும்பையிலும் சாலையோரங்களில் விற்கப்படும். ஆனால் அங்கு நம்ம ஊர் தேங்காய் சட்னிக்குப் பதில் மும்பை ஸ்டைல் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படும். இதில் சேர்க்கப்படும் சில கூடுதல் பொருட்கள் அதன் சுவையை தனித்துவமானதாக மாற்றும். இந்த பதிவில் மும்பை ஸ்டைல் தேங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 நடுத்தர அளவு தேங்காய்
- 1/2 கப் பொட்டுக்கடலை
- 2 தேக்கரண்டி தயிர்
- 4 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 கப் தண்ணீர்
தாளிக்க:
- கறிவேப்பிலை சிறிதளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- பெருங்காயம் சிறிதளவு
- கடலைப்பருப்பு சிறிதளவு
செய்முறை:
- தேங்காயை உடைத்து துருவி வைத்துக்கொள்ளவும்.
- முதலில் பொட்டுக்கடலையையும், பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது துருவிய தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சிறிது கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். இதை அதிகமாக அரைக்க வேண்டாம், ஏனெனில் கொரகொரவென இருந்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இப்போது இதில் தயிர் மற்றும் பொட்டுக்கடலை கலவையை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க எப்போதும் போல ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இறுதியாக பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி நன்கு கலந்தால் சுவையான மும்பை ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி.
- இது இட்லி, தோசை மற்றும் உப்புமாவிற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.
- கூடுதல் சுவையை விரும்பினால் இதனுடன் 2 பல் பூண்டு சேர்த்து அரைக்கலாம். இது சட்னியின் சுவையை தனித்துவமானதாக மாற்றும்.
- காரத்தை விரும்பாதவர்கள் பொட்டுக்கடலைக்குப் பதில் நிலக்கடலை சேர்த்து அரைக்கலாம். இது சட்னிக்கு கொஞ்சம் இனிப்பு சுவையைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
