Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்
மசாலா பாவ் மாலை வேளையில் அதுவும் மழைப் பெய்யும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே மசாலா பாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
வட இந்தியாவில் பாவ் பாஜி, மசாலா பாவ் போன்றவை மிகவும் பிரபலமான சாட் உணவுப் பொருட்கள். இந்த வகை ஸ்நாக்ஸ்களை கடைகளில் தான் நாம் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அவற்றையும் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் தெரியுமா? ஆம், அதிலும் மும்பையில் தெருவோரங்களில் விற்கப்படும் பிரபலமான மசாலா பாவ்வை எளிதில் வீட்டிலேயே செய்யலாம்.

மசாலா பாவ் மாலை வேளையில் அதுவும் மழைப் பெய்யும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே மசாலா பாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பாவ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாவ் பன் - 4
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* வெண்ணெய் - 2 டீஸ்பூன் + டோஸ்ட் செய்ய 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
மசாலா பொடிகள்:
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா பொடி - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
அலங்கரிக்க...
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய தோசை தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, உருளைக்கிழங்கு மசிப்பதைக் கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
* இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, தவாவின் ஒரு பக்கமாக தள்ளி வையுங்கள். மறு பக்கத்தில் சிறிது வெண்ணெய் வைத்து, அதன் மேல் பாவ் பன்னை இரண்டாக வெட்டி இரண்டு பக்கத்தையும் லேசாக டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் வெட்டி டோஸ்ட் செய்த பக்கத்தில் மசாலாவைப் பரப்புங்கள். அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து சூடாக பரிமாறினால் சுவையான மசாலா பாவ் தயார்!



Click it and Unblock the Notifications