Latest Updates
-
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இட்லி, தோசைக்கு முள்ளங்கியை வைச்சு இந்த சட்னியை அரைச்சு பாருங்க... எல்லாரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
Mullangi Chutney Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை தான் இருக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் அதற்கு சைடு டிஷ்ஷை தேர்வு செய்வதே ஒரு பெரிய வேலையாக மாறுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஆரோக்கியமான முள்ளங்கி சட்னியைத் தான். பொதுவாக காய்கறிகளை வைத்து சாதத்திற்குத்தான் சட்னி செய்வோம். ஆனால் இந்த முள்ளங்கி சட்னியை சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும்.

இந்த சட்னியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். அனைவருமே வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சுவையான முள்ளங்கி சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 300 கிராம் முள்ளங்கி
- 1 அங்குல இஞ்சி
- பெரிய வெங்காயம் ஒன்று
- 1/2 ஸ்பூன் மஞ்சள்
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 கப் மல்லி விதைகள்
- 10 வர மிளகாய்
- 1 ஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- புளி - சிறிதளவு
தாளிக்க:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முள்ளங்கியை தோலுரித்து சிறிய, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2 ஸ்பூன் எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கி முள்ளங்கித் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 15 நிமிடங்களுக்குப் பிறகு, முள்ளங்கித் துண்டுகள் அவற்றின் காரத்தன்மையை இழந்து பொன்னிறமாக மாறும். பிறகு வெங்காயம், இஞ்சி, மஞ்சள் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புளி சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
- அதே கடாயில், மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கொத்தமல்லி விதைகள், சீரகம் மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர் மசாலாப் பொருட்களையும் முள்ளங்கித் துண்டுகளைச் சேர்த்து, உப்பு சேர்த்து, கரடுமுரடான சட்னியாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு சூடான நீர்சேர்த்துக் கொள்ளவும்.
- சட்னி அரைத்தும் அதை தாளிக்க எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து முள்ளங்கி சட்னியில் கலக்கவும்.
- இட்லி, தோசைக்கு அருமையான முள்ளங்கி சட்னி ரெடி. இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
