Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
முகலாய் பன்னீர் கிரேவி ரெசிபி
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது நாண் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக முகலாய் பன்னீர் கிரேவி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது நாண் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? இன்னும் எதுவும் யோசிக்காமல் இருந்தால், இரவு முகலாய் பன்னீர் கிரேவி செய்யுங்கள். புரோட்டீன் அதிகம் நிறைந்த பன்னீர் நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள். குறிப்பாக குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு இன்று விருந்தளிக்கும் வகையில் சமைத்துக் கொடுக்க நினைத்தால், இந்த முகலாய் பன்னீர் கிரேவி சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் இது காரமாக இருக்காது மற்றும் மிகவும் க்ரீமியாக சூப்பராக இருக்கும்.

உங்களுக்கு முகலாய் பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகலாய் பன்னீர் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3-4
* முந்திரி - 10-12
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சாஹி சீரகம் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* தயிர் - 1/2 கப்
* உலர்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீம் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முந்திரியைப் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி, வெங்காயம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சாஹி சீரகம் சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக அதில் உலர்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கிப் போட்டு, க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், முகலாய் பன்னீர் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications