Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
Mother's Day 2023: அன்னையர் தின ஸ்பெஷல்- மைசூர் மட்டன் கிரேவி
Mother's Day 2023: இன்று அன்னையர் தினம். இந்த தினத்தில் உங்கள் அம்மாக்களுக்கு நீங்கள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தால், இன்று அவருக்கு சமையல் செய்ய லீடு கொடுத்து, அவரை உட்கார வைத்து அவருக்கு பிடித்த சமையலை செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் அம்மாவிற்கு மட்டன் பிடிக்குமானால், மைசூர் மட்டன் கிரேவியை செய்து கொடுங்கள். இந்த மட்டன் கிரேவி சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு மைசூர் மட்டன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் - 500 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4-5 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
கிரேவிக்கு...
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* அரைத்த தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 1
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை
சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு, தயிர், மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்த நன்கு கிளறி, சிறிது நீரை
ஊற்றி கிளறி, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற
வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், தக்காளி
விழுது சேர்த்து கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து
கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
மைசூர் மட்டன் கிரேவி தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு மிகவும் கிரேவியாக வேண்டுமானால், அதில் சிறிது நீரை சேர்த்துக் கொள்ளலாம். ட்ரையாக வேண்டுமானால், நீர் வற்றும் வரை சுண்ட கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
Image Courtesy: awesomecuisine



Click it and Unblock the Notifications