Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கைப்பிடி முருங்கைக்கீரை வெச்சு.. ஒருவாட்டி இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Murungai Keerai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் வீட்டில் சட்னி தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை அதிகம் சாப்பிடமாட்டார்களா? அவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் முருங்கைக்கீரை வாங்கினால், அதைக் கொண்டு சட்னியை செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* புளி - 1 துண்டு
* பூண்டு - 2 பல்
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், உளுத்தம்
பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை
சேர்த்து வறுத்து இறக்கி அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, புளி, பூண்டு மற்றும் தேங்காயை சேர்த்து,
சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முருங்கைக்கீரை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை ஜாரில் பொடித்து வைத்துள்ளதுடன் சேர்த்து, நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முருங்கைக்கீரை சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications