Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Moong Dhal Puttu Recipe: எப்போதும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி செய்து போரடித்துவிட்டதா? சற்று சத்தானதாகவும், வித்தியாசமானதாகவும், அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறுமாறான ஒரு காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புட்டு செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யும் புட்டை செய்யாமல், சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பைக் கொண்டு புட்டு செய்யுங்கள். இந்த புட்டு சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 கப்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை
நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அதில் அரைத்த
மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வேக வைத்த இட்லிகளை எடுத்து, ஓரளவு குளிர்ந்ததும், அவற்றை
உதிர்த்து விட வேண்டும்.
* பிறகு உதிர்த்து விட்டதை அளந்து பார்க்க வேண்டும். ஒரு கப் புட்டு
மாவிற்கு 1/2 கப் சர்க்கரை என்று சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நீரை ஊற்றி கம்பி
பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.
* இறுதியாக அதில் உதிர்த்து வைத்துள்ள பருப்பு, துருவிய தேங்காய்,
ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் நெய்யை சேர்த்து, குறைவான தீயில்
வைத்து, ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான
பாசிப்பருப்பு புட்டு தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications







