Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
1 கப் பால் பவுடரும், மைதாவும் இருக்கா? அப்ப ஒருமுறை இப்படி பால் கேக் செய்யுங்க.. செமயா இருக்கும்...
Milk Cake Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் பால் பவுடரும், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மில்க் கேக் செய்யலாம்.
இந்த மில்க் கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் பால் கேக்கை செய்யலாம். முக்கியமாக இந்த பால் கேக்கை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மில்க் கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் பவுடர் - 1 கப்
* மைதா - 1 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சர்க்கரை பாகுவிற்கு..
* சர்க்கரை - 1 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* ஏலக்காய் - 2
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, பேக்கிங் பவுடர்,
ஏலக்காய் தூள், உப்பு, நெய் சேர்க்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான பாலை ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை அப்படியே சப்பாத்தி போன்று சதுரமாக, அதே சமயம்
சற்று தடிமனாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு கத்தியால் சிறு செவ்வகத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெட்டி வைத்துள்ள துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாக ப்ரை செய்து தனியாக ஒரு அகலமான கிண்ணத்தில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீர் மற்றும் 1 1/2 கப் சர்க்கரை
சேர்த்து, 2 ஏலக்காயைத் தட்டிப் போட்டு, குங்குமப்பூவையும் சேர்த்து,
சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு அந்த சர்க்கரை பாகை ப்ரை செய்து வைத்துள்ள கேக்கில் ஊற்றி,
2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதைப் பரிமாறினால், சுவையான பால் கேக்
தயார்.



Click it and Unblock the Notifications