Latest Updates
-
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவின் டாப் 10 பழமையான நகரங்கள் என்னென்ன தெரியுமா? இதில் 2 நகரங்கள் தமிழ்நாட்டில் இருக்காம் -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்.. -
உலக வரைபடத்திலேயே இல்லாத 7 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளுக்கு தனி இராணுவம், கரன்சி கூட இருக்காம் -
கருப்பு உளுந்து இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட... -
நவம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம்
தோசை மாவு இல்லாத நேரத்துல 1 கப் மீல் மேக்கர் வெச்சு இப்படி தோசை சுடுங்க.. மொறுமொறுன்னு செமயா இருக்கும்..
Meal Maker Dosa Recipe In Tamil: காலை வேளையில் தோசை சுட மாவு இல்லையா? காலையில் டக்கென்று என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் மீல் மேக்கர் இருக்கிறதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரை வைத்து ஒரு அட்டகாசமான சுவையில் மொறுமொறுவென்று தோசையை சுட்டு சாப்பிடுங்கள்.
இந்த மீல் மேக்கர் தோசை ரவா தோசையைப் போன்றே நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். மேலும் இது காலையில் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இந்த தோசைக்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* காஷ்மீரி மிளகாய் - 3
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறு துண்டு
* கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி - 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் மீல் மேக்கர்,
காஷ்மீரி வரமிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு 2 நிமிடம் மூடி வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் மீல் மேக்கர், வரமிளகாய், பச்சை மிளகாய்,
இஞ்சி, ரவை மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கோதுமை மாவு,
சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு,
கசூரி மெத்தி, கொத்தமல்லி மற்றும் நீரை ஊற்றி நன்கு தோசை மாவு
பதத்திற்கு, சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை ரவா தோசையை விடுவது போன்று ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி
மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
மீல்மேக்கர் தோசை தயார்.
Image Courtesy: Smitha Kalluraya



Click it and Unblock the Notifications
