Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
ரோட்டுக்கடை மசாலா சிக்கன் ப்ரைடு ரைஸ் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க...
Rottukadai Masala Chicken Fried Rice Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்போருக்கு ப்ரைடு ரைஸ் என்றால் பிடிக்குமா? அடிக்கடி கடையில் ப்ரைடு ரைஸ் வாங்கி சாப்பிடுவீர்களா? நிறைய பணம் கொடுத்து கடைகளில் அளவாக ப்ரைடு ரைஸை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதை வீட்டிலேயே வேண்டிய அளவு செய்தால், அளவில்லாமல் ஆசை தீர சாப்பிடலாம் அல்லவா?
அதுவும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சிக்கன் ப்ரைடு ரைஸ் பிடிக்குமானால், அதை வீட்டிலேயே அதுவும் இந்தியன் ஸ்டைலில் செய்து கொடுங்கள். அதாவது சாஸ் எதுவும் சேர்க்காமல், இந்தியன் மசாலா பொருட்களைப் பயன்படுத்தி செய்யுங்கள். நமது ரோட்டுக்கடைகளில் எல்லாம் இப்படி தான் மசாலா ப்ரைடு ரைஸ் செய்வார்கள்.

உங்களுக்கு ரோட்டுக்கடை சிக்கன் மசாலா ப்ரைடு ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை சிக்கன் மசாலா ப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து ப்ரை செய்வதற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - பாதி
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
முட்டை ப்ரைக்கு...
* முட்டை - 3
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
ப்ரைடு ரைஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2
* கேரட் - 1
* முட்டைக்கோஸ் - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சாதம் - 1 கப்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பொடியாக நறுக்கிய எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்,
கரம் மசாலா, மிளகுத் தூள், சோள மாவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு முட்டையை அடித்து அதில் பாதியை ஊற்றி, அத்துடன்
எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கைகளால் பிரட்டி,
20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு
ப்ரை செய்து எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் மிளகுத் தூள்
மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சிக்கன் ப்ரை செய்த அதே வாணலியில் உள்ள எண்ணெயில் முட்டையை
ஊற்றி வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும்
பூண்டு பற்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்த சிக்கன் மற்றும் முட்டையை சேர்த்து நன்கு
உயர் தீயில் வைத்து கிளறி, மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் கிளறி
இறக்கினால், சுவையால் ரோட்டுக்கடை மசாலா ப்ரைடு ரைஸ் தயார்.



Click it and Unblock the Notifications





