Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
சுவையான... மசாலா தோசை
உங்கள் வீட்டில் இன்று காலை தோசை சுடப்போறீங்களா? தினமும் வெறும் தோசையை சுட்டு சாப்பிட்டு போர் அடிக்கிறதா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் மசாலா தோசை செய்யுங்கள். மசாலா தோசை செய்வது மிகவும் எளிது.
உங்கள் வீட்டில் இன்று காலை தோசை சுடப்போறீங்களா? தினமும் வெறும் தோசையை சுட்டு சாப்பிட்டு போர் அடிக்கிறதா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் மசாலா தோசை செய்யுங்கள். மசாலா தோசை செய்வது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால் போதும், அற்புதமான மசாலா தோசை செய்யலாம்.

உங்களுக்கு மசாலா தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - தேவையான அளவு
* உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், மசாலா தயார்.
* இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தோசை மாவு கொண்டு தோசை ஊற்றி, பின் அதன் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மொறுமொறுப்பானதும், தோசையின் நடுவே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, தோசையை மடித்து எடுத்தால், சுவையான மசாலா தோசை தயார்.



Click it and Unblock the Notifications