Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
ஈவ்னிங் பள்ளி முடிந்து பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு மரவள்ளிக் கிழங்கை இப்படி செஞ்சு குடுங்க..
Maravalli kilangu Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு வெறுமனே காபி, டீ, பாலைக் கொடுக்காமல், அவர்களின் பசியை ஆற்றும் வகையில் சத்தான ஸ்நாக்ஸ் ஏதாவது கொடுத்தால், மாலை வேளையில் படிக்க வசதியாக இருக்கும்.
அதுவும் எப்போதும் எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸைக் கொடுக்காமல், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அப்படி என்ன ஸ்நாக்ஸ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதை துருவி புட்டு செய்யுங்கள். இந்த புட்டு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* உப்பு - 2 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* ஏலக்காய் தூள் - சிறிது
* சர்க்கரை - சுவைக்கேற்ப
* தேங்காய் துருவல்
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் மேலே தோலை
நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் அந்த மரவள்ளிக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
* துருவிய மரவள்ளிக்கிழங்கில் பால் அதிகம் இருக்கும். எனவே அந்த பாலை
ஒரு பாத்திரத்தில் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாலை தூக்கி
எறிய வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவற்றை தோசை சுடும் மாவுடன் கலந்து
கொண்டால், தோசை மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
* கிழங்கில் உள்ள பாலை பிழிந்து நீக்கிய பின், அதை ஒரு பாத்திரத்தில்
உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் உப்பு, ஏலக்காய் தூள், சுவைக்கேற்ப சர்க்கரை
மற்றும் துருவிய தேங்காயை ஒரு கைப்பிடி சேர்த்து, நன்கு கைகளால் கிளறி
விட வேண்டும்.
* பிறகு சிறு சிறு கிண்ணங்களை எடுத்து, அவற்றில் சிறிது தேங்காய்
துருவலை முதலில் தூவி, அதன் பின் கலந்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை
வைத்து, அதன் மேல் சிறிது தேங்காய் துருவலை தூவ வேண்டும்.
* இறுதியாக ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் இந்த கிண்ணங்களை
வைத்து, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி,
கிண்ணங்களை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும். பின் அந்த
கிண்ணங்களை ஒரு தட்டில் குப்புற போட்டு தட்டினால், சுவையான
மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
