Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க...
Mango Sweet Recipes In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? தற்போது மாம்பழ சீசன் என்பதால், நல்ல சுவையான மாம்பழ வெரைட்கள் மார்கெட்டுகளில் விலைக் குறைவில் கிடைக்கும்.

இப்படி கிடைக்கும் மாம்பழங்களை எப்பவும் வெறுமனே சாப்பிட கொடுக்காமல், ஒருமுறை அதைக் கொண்டு ஒரு அருமையான ஸ்வீட் செய்து கொடுங்கள். அதுவும் மாம்பழமும், பிரட்டும் இருந்தால் போதும் வயிறு நிரம்பும்படியான ஒரு சூப்பர் ஸ்வீட் செய்யலாம். இந்த மாம்பழ ஸ்வீட்டை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.
உங்களுக்கு இந்த மாம்பழ ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த மாம்பழ ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாம்பழம் - 2
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 லிட்டர்
* கஸ்டர்டு பவுடர் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1/4 கப்
* மில்க் பிரட் - 6 துண்டுகள்
* நறுக்கிய பாதாம் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நன்கு கனிந்த மாம்பழத்தை எடுத்து, அதன் தோலை
நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் மாம்பழத் துண்டுகளை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நன்கு காய்ச்சி குளிர வைத்த பாலை எடுத்து,
அதில் 2 1/2 டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை சேர்த்து, அத்துடன் 1/4
கப் சர்க்கரை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து, ஓரளவு
கெட்டியாகும் வரை ஒரு 4-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* நன்கு குளிர்ந்த பின்னர் அதை அப்படியே அரைத்த மாம்பழத்துடன்
சேர்த்து நன்கு க்ரீம் போன்ற பதத்திற்கு வருமளவில் நன்கு கலந்து விட
வேண்டும்.
* அதன் பின் பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு ட்ரே அல்லது விருப்பமான பௌல்/கிண்ணத்தை எடுத்து, அதில்
பிரட் துண்டுகளை பரப்பி வைத்து, அதன் மேல் தயாரித்து வைத்துள்ள ஒரு
லேயர் மாம்பழ க்ரீம்மை பரப்பி ஊற்ற வேண்டும். அதன் பின் மீண்டும் மேலே
பிரட் துண்டுகளை பரப்பி வைத்து, அதன் மேல் மீண்டும் மாம்பழ க்ரீம்மை
பரப்பி ஊற்ற வேண்டும்.
* பின்பு அதன் மேல் பாதாமை பொடியாக நறுக்கி தூவி, ஃப்ரிட்ஜ்ஜில்
குறைந்தது 1 மணிநேரம் வைத்து, பின் பரிமாறினால், சுவையான மாம்பழ
ஸ்வீட் தயார்.
குறிப்பு:
உங்கள் வீட்டில் கஸ்டர்டு பவுடர் இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் சோள மாவையும், சிறிது வென்னிலா எசன்ஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
