Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
மாம்பழ பூரி
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் எங்கும் விலை குறைவில் கிடைப்பதைக் காணலாம். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழத்தை பல வித்தியாசமான வழிகளில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழ பூரி செய்து சாப்பிடுங்கள்.
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் எங்கும் விலை குறைவில் கிடைப்பதைக் காணலாம். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழத்தை பல வித்தியாசமான வழிகளில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழ பூரி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு வித்தியசமான சுவையில் இருக்கும். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு நல்ல ப்ளேவருடனும் இருக்கும்.

உங்களுக்கு மாம்பழ பூரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ பூரியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* மாம்பழ கூழ் - 1/4 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மாம்பழ கூழ், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் விரல்களால் மெதுவாக கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்தால், மாம்பழ பூரி தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு பூரி இனிப்பாக வேண்டுமானால், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இதற்கு மேல் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் பூரி எளிதில் கருகிவிடும்.
* மாம்பழ கூழ் சேர்ப்பதால் வழக்கத்தை விட வேகமாக பூரி வெந்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

