Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இட்லி, தோசைக்கு இந்த மங்களூர் ஸ்பெஷல் தேங்காய் சட்னியை செஞ்சு பாருங்க...வீட்ல எல்லாரும் அதிகமாக சாப்பிடுவாங்க!
Mangalore Coconut Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு நேர உணவாக இருப்பது இட்லி, தோசைதான். ஆனால் பெரும்பாலும் அவற்றுக்கு ஒரே மாதிரியான சட்னிதான் செய்யப்படுகிறது. திரும்பவும் அதே சட்னியா என வீட்டில் அலுத்து கொள்கிறார்களா? புதிதாக என்ன சட்னி செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட மங்களூர் ஃபேமஸ் தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை சித்தரான கொஜ்ஜு என்று அழைப்பார்கள். இந்த சட்னியில் இனிப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவையும் நிறைந்திருக்கும். இதில் சேர்க்கப்படும் வேர்க்கடலை இந்த சட்னிக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். வழக்கமான சட்னி போல அல்லாமல் இதன் சுவை வேற லெவலில் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்து தர கேட்பார்கள்.

உங்களுக்கு மங்களூர் ஃபேமஸ் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஃபேமஸ் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 4 சிவப்பு மிளகாய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1 சிறிய எலுமிச்சை அளவு வெல்லம்
- 1 நெல்லிக்காய் அளவு புளி
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் நிலக்கடலை
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் துருவிய தேங்காய், வர மிளகாய் மற்றும் கடுகு ஆகியவற்றை மிக்சி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க இருக்க கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பின்னர் வர மிளகாய், கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை சேர்த்து பருப்பின் நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- பின்னர் 2 ஸ்பூன் நிலக்கடையை சேர்த்து வறுக்கவும்.
- தாளித்து முடிந்ததும் அதில் மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- பின்னர் அரைத்த தேங்காய் விழுதை இதில் சேர்த்து வெல்லம் மற்றும் புளிச்சாறு சேர்க்கவும்.
- இதை நன்றாக கலக்கி விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவுதான் சுவையான மங்களூர் ஃபேமஸ் சித்தரான கொஜ்ஜு ரெடி!



Click it and Unblock the Notifications
