Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
உடலுக்கு குளிர்ச்சியை தரும் மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பு.. 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாருங்க...
Manga Vellarikai Mor Kuzhambu Recipe In Tamil: தற்போது மாங்காய் சீசன் என்பதால் விலைக்குறைவில் மாங்காய் கிடைக்கும். இப்படி மாங்காய் கிடைக்கும் போது, அதை கொண்டு வெறும் ஊறுகாய் செய்யாமல், ஒருமுறை மோர் குழம்பு செய்யுங்கள். அதுவும் மாங்காயுடன் வெள்ளரிக்காயும் சேர்த்து மோர் குழம்பு செய்யுங்கள்.
இந்த மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பு கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். இந்த குழம்பை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். நல்ல சூடான சாதத்துடன் இந்த குழம்பை ஊற்றி சாப்பிடும் போது, கணக்கில்லாமல் வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள். முக்கியமாக ஒருமுறை இந்த குழம்பை செய்தால், அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தயிர் - 1 கப்
* மாங்காய் - 1/2 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெள்ளரிக்காய் - 1/2 (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சரிசி - 2 டீஸ்பூன் (நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 3
* வரமிளகாய் - 3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய்,
வரமிளகாய், சீரகம், இஞ்சி சேர்த்து, ஊற வைத்த அரிசியை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு மோர் போன்று அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட
மாங்காய் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, 1
சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* மாங்காயும், வெள்ளரிக்காயும் நன்கு வெந்ததும், தீயைக் குறைத்து
அடித்து வைத்துள்ள மோரை ஊற்றி கிளறி, அத்துடன் அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதையும் சேர்த்து கிளறி, நுரை கட்டி வரும் போது அடுப்பை
அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மோர் குழம்பில் ஊற்றினால், சுவையான
மாங்காய் வெள்ளரிக்காய் மோர் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications