Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாதம் உருவாகும் விஷகும்ப யோகத்தால் விபரீதமான பலன்களை அடையப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மட்டன் பிரியாணியை மிஞ்சும் கொத்தமல்லி பிரியாணி ரெசிபி - செஞ்சு பாருங்க, டக்கரா இருக்கும் -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் குடும்பத்தின் தலைவிதியை மாற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாம் -
கோடையில் முகம் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப இந்த பச்சை பயறு ஃபேஸ் பேக்கை போடுங்க... -
வெயில் காலத்தில் கல்யாணமா? பாரம்பரியத்தை விட ஆரோக்கியம் முக்கியம், இந்த மாற்றங்களைச் செய்யத் தவறாதீர்கள்! -
பக்ரீத் ஸ்பெஷல் திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா? -
திருமணப் பிரச்சனையா? ஆதாரமில்லாமல் கணவர் வீட்டாரை வழக்கில் இழுத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
உலகில் 90% மக்கள் ஏன் வலது கையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இதுதான் காரணமாம் -
1 வருடம் கழித்து உருவாகும் பத்ரா ராஜயோகம்: மே 29 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
Manathakkali Keerai Chutney Recipe in Tamil: பொதுவாகவே கீரைகளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கும். கீரைகளை சாப்பிடுவது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிக்காது. ஏன் சில பெரியவர்களுக்கு கூட பிடிக்காது தான். அதிலும் கசப்பான முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, மற்றும் அகத்தி கீரைகளை முற்றிலும் சிலர் தவிர்த்து விடுவார்கள். ஆனால் இந்த கீரைகளில்தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது, எனவே அவற்றை எதாவது ஒரு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கீரை பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்க சிறந்த வழி அவற்றை சட்னி வடிவில் செய்து கொடுப்பதுதான். அதிலும் மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது பல நன்மைகளை அளிக்கும். வெயில் காலம் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலை வெயிலால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

இந்த மணத்தக்காளி கீரை சட்னி செய்வது எளிதானது அதேசமயம் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் மிகவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு மணத்தக்காளி கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மணத்தக்காளி கீரை - 1 கட்டு
- சின்ன வெங்காயம் - 8
- பச்சை மிளகாய் - 2
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- பூண்டு - 2 பல்
- துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
- புளி - சிறிதளவு
- உளுத்தம்பருப்பு - ½ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- வர மிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கடுகு - ½ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - ½ ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் மணத்தக்காளி இலைகளை 2 நிமிடங்களுக்கு மெதுவாக வதக்கவும்; தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பருப்பு வகைகள், புளி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி தனியாக ஆற வைக்கவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் வதக்கிய மணத்தக்காளி இலைகளைச் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு போட்டி பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னியில் கொட்டி கிளறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications