சிக்கன் வாங்குனா இந்த மலபார் சிக்கன் பிரியாணியை ஒருதடவை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்

Posted By:

Malabar Chicken Biryani Recipe in Tamil: பிரியாணி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பிரியாணிதான். அடிக்கடி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்களா? இல்லாவிட்டால் வீட்டிலேயே பிரியாணி செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பிரியாணி செய்வீர்களா? ஒரே மாதிரி பிரியாணி சாப்பிட்டு போரடித்து விட்டதா?

Malabar Chicken Biryani Recipe How to Make at Home in Tamil

அப்படியானால் அடுத்தமுறை பிரியாணி செய்வதாக இருந்தால், மலபார் சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த சிக்கன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த பிரியாணி கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ் பெற்றதாகும். முக்கியமாக இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த பிரியாணி வழக்கமான பிரியாணி போல அல்லாமல் வெள்ளை நிறத்தில் வித்தியாசமாக இருக்கும்.

உங்களுக்கு மலபார் சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மலபார் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சிக்கன் - 1 கிலோ
- பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 6
- தேங்காய் எண்ணெய் - 1 கப்
- பிரியாணி இலை - 1
- பட்டை - 1 துண்டு
- ஏலக்காய் - 5
- கிராம்பு - 4
- அன்னாசிப்பூ - 1
- சோம்பு - 1 ஸ்பூன்
- தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
- தயிர் - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
- சீரகத் தூள் - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலைகள் - ½ கப்
- புதினா இலைகள் - ½ கப்

அரிசி சமைக்கத் தேவையானவை:

- பாசுமதி அரிசி - 500 கிராம்
- தண்ணீர் - தேவையான அளவு
- பிரிஞ்சி இலை - 1
- பட்டை - 1 துண்டு
- ஏலக்காய் - 5
- கிராம்பு - 4
- அன்னாசிப்பூ - 1
- சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

- அரிசியை நன்றாகக் கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

- பிரியாணி செய்ய ஆரம்பிக்க பிரியாணி பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். நறுக்கி வைத்துள்ள 3 வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அதை தனியாக எடுத்து வைக்கவும்.

- அதே எண்ணெயில், முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து அவை பொரியும் வரை விடவும்.

- நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.

- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து, அவை நன்கு குழைந்து வரும் வரை வேகவைக்கவும்.

- அதன்பின் கழுவிய சிக்கன், மிளகாய் மற்றும் பிற மசாலாத் தூள்களைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- பின்னர் தயிரையும், உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- பாத்திரத்தை மூடி வைத்து, சிக்கன் வேகும் வரை சமைக்கவும். பிறகு, மசாலாவில் பாதியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

- சிக்கன் வெந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், அரிசியைச் சமைக்கவும்.

- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் உப்பு மற்றும் முழு மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்.

- தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அரிசியைச் சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை, அரிசி வேகும் வரை சமைக்கவும்.

- அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, அரிசியைத் தனியே எடுத்து வைக்கவும்.

- இப்போது மசாலாவின் மீது பாதியளவு சாதத்தைப் பரப்பவும். அதன் மேல் கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும்.

- அதன்பின் மீதமுள்ள மசாலாவைப் பரப்பவும். அதன் மேல் மீண்டும் சாதம், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும்.

- பாத்திரத்தை மூடி, மிகக் குறைந்த தீயில் 30 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன் பிறகு, அப்படியே 15 நிமிடங்கள் ஆறவிடவும்.

- அதன்பின் மூடியைத் திறந்து கிளறி சூடாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 15, 2026, 15:49 [IST]
Desktop Bottom Promotion