1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Makhandi Halwa Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்து தர சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் ரவையும், பாலும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு வாயில் வைத்ததும் கரையும்படியான அல்வாவை செய்து கொடுங்கள். இந்த அல்வாவை மக்கண்டி அல்வா என்று அழைப்பர்.

Makhandi Halwa How To Make Makhandi Halwa Recipe In Tamil

இந்த அல்வா ரவா கேசரி போன்று தான் இருக்கும். ஆனால் இதன் ஸ்பெஷ்் கேரமல் தயாரித்து செய்வதாகும். இந்த அல்வாவை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த அல்வா 10-15 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த மக்கண்டி அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மக்கண்டி அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ரவை - 1 கப்
* காய்ச்சிய பால் - 2 கப்
* நெய் - 1/2 கப்
* சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் - 2
* சிவப்பு ஃபுட் கலர் - 1 சிட்டிகை
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்கு கலந்து, 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்படி தொடர்ந்து 5-6 நிமிடம் கிளறி விடும் போது, அது கேரமல் பதத்திற்கு வந்துவிடும்.
* பிறகு அதில் 2 ஏலக்காயை தட்டில் போட்டு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள ஊற வைத்த ரவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் 1 சிட்டிகை சிவப்பு நிற ஃபுட் கலர் பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மக்கண்டி அல்வா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 16, 2026, 18:17 [IST]
Desktop Bottom Promotion