Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 கப் மைதா மாவும், 1 கரண்டி தோசை மாவும் இருந்தா டக்குனு இந்த இனிப்பு போண்டாவை செய்யுங்க... டக்கரா இருக்கும்...
Maida Sweet Bonda Recipe in Tamil: வீட்டிலிருக்கும் போது ஏதாவது சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இப்போது பரவலாக மழை பெய்து வருவதால் மாலை நேரத்தில் ஏதாவது சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அதற்காக கடைக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு ஸ்நாக்ஸ் செய்ய தெரிந்து கொண்டால், அதிக செலவு செய்யாமல் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.
அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்று ஏதாவது சாப்பிடத் தோன்றினால் இந்த போண்டாவை செய்து கொடுங்கள். போண்டா என்றால் எப்போதும் காரமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் வீட்டில் மைதா மாவும், தோசை மாவும் இருந்தால் அதை வைத்தே சூப்பரான இனிப்பு போண்டாவை செய்யலாம்.

இந்த இனிப்பு போண்டா செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதுமானது. அதே சமயம் இது செய்வதற்கு 10 நிமிடங்களே போதுமானது. முக்கியமாக இந்த போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு மைதா மாவு இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அதற்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு - 200 கிராம்
- பொடித்த வெல்லம் - 100 கிராம்
- தேங்காய் பால் - 50 மில்லி
- தோசை மாவு - 1 கரண்டி
- ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
- சோடா உப்பு - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து நன்கு சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் மைதாவை போட்டு கிளறவும்.
- மைதா சூடானதும் ஒரு வாயகன்ற பாத்திரத்திற்கு மாற்றவும். அதனுடன் ஏலக்காய் தூள், சோடா உப்பு சேர்க்கவும். வெல்லத்தை மிக்சியில் அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் மைதாமாவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி அதனுடன் தோசை மாவு, தேங்காய் பால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு ரெடி பண்ணவும்.
- இடஙக கலவையை அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு சிறிய குழிக்கரண்டியில் மாவை எடுத்து உருண்டையாக எண்ணெயில் ஊற்றவும்.
- ஒரு புறம் வெந்ததும் திருப்பி போடவும்.இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து விடவும்.
- மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும்.இப்போது சுவையான மைதா மாவு இனிப்பு போண்டா தயார்.
- இந்த போண்டாவை சரியான முறையில் சேமித்து வைத்தால் இரண்டு நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
