Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
பூரி, சப்பாத்திக்கு சிக்கனை இப்படி ஒருமுறை கிரேவி செஞ்சு பாருங்க.. வேற லெவல் டேஸ்ட்-ல இருக்கும்...
Maharashtrian Style Chicken Curry Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வீட்டில் ஸ்பெஷலாக ஏதாவது சமைக்க விரும்புவீர்களா? இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுக்கப் போகிறீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு மஹாராஷ்ட்ரியன் ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.
இந்த கிரேவி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இதை செய்யும் பக்குவம் தான் இந்த கிரேவியின் டேஸ்ட்டிற்கு முக்கிய காரணம்.

உங்களுக்கு மஹாராஷ்ட்ரியன் ஸ்டைல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஹாராஷ்ட்ரியன் ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி பூண்டு விழுதிற்கு...
* பூண்டு - 10 பற்கள்
* இஞ்சி - 2 பெரிய துண்டு
* கொத்தமல்லி - 1 கப்
மசாலா பேஸ்ட்டிற்கு...
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 ஸ்பூன்
* மிளகு - சிறிது
* பட்டை - 2
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 2
* வரமிளகாய் - 6
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* பிரியாணிஇலை - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 4 (துருவியது)
* சிக்கன்- 1 கிலோ (நீரில் நன்கு கழுவியது)
* மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன் + சுவைக்கேற்ப
* சுடுநீர் - 1/2 கப் + 2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை சேர்த்து
நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் மல்லியை
சேர்த்து நிறம் மாற வறுத்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு, பட்டை,
கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுத்து, அதை வறுத்த மல்லியுடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து நீர் வற்றும் வரை
வறுத்து அதையும் வறுத்த பொருட்களுடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி
இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு
அதில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நீர் சேர்க்காமல் அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த இஞ்சி பூண்டு விழுதை 1 டீஸ்பூன்
எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ளதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு 3
நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி,
பின் எடுத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நன்கு 1 நிமிடம் கிளறி,
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து
வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, வதக்கி வைத்துள்ள மசாலாவை
சேர்த்து நன்கு கிளறி, 2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை
பார்த்து, மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான மஹாராஷ்டரியன் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications