Latest Updates
-
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும்
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க..
Mahalaya Amavasya 2026 Recipe In Tamil: மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு படையல் போடும் போது, அவற்றில் குறிப்பிட்ட சில காய்கறிகளை சமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் ஒன்று தான் வாழைக்காய். இந்த வாழைக்காயை நீங்கள் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த மகாளய அமாவாசைக்கு வாழைக்காய் செய்வதாக இருந்தால் கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை செய்யுங்கள். இப்படி வறுவல் செய்யும் போது சுவை பிரமாதமாகவும் இருக்கும், வாழைக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* பெரிய வாழைக்காய் - 2
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4-5 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த வாழைக்காய்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 3
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த தேங்காய் மசாலா
* வறுத்த வாழைக்காய்
அரைப்பதற்கு..
* நறுக்கிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4-5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து நன்கு பிரட்டி, 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4-5 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வாழைக்காயை சேர்த்து 3 நிமிடம் ப்ரை செய்து,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு
தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளியுடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை
கிளறி, அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி
வைத்து பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் ப்ரை செய்த வாழைக்காயை
சேர்த்து நன்கு கிளறி, நிறம் மாறும் வரை வேக வைத்து, கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications
