Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
மணமணக்கும்... மதுரை வெஜ் சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க...
Madurai Veg Sukka Recipe In Tamil: மதியம் உங்கள் வீட்டில் சாம்பார் செய்துள்ளீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு, மொச்சை, மீல் மேக்கர் போன்றவை உள்ளதா? அப்படியானால் அவற்றை கொண்டு மதுரை நான்வெஜ் சுக்கா ஸ்டைலில் வெஜ் சுக்கா செய்யுங்கள்.
இந்த வெஜ் சுக்கா சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதோடு இந்த சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சுக்காவை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு மதுரை வெஜ் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை வெஜ் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
* மீல் மேக்கர் - 100 கிராம் (சுடுநீரில் ஊற வைத்து எடுத்தது)
* மொச்சை பயறு - 100 கிராம் (வேக வைத்தது)
* பூண்டு - 7-8
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சுடுதண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சுக்கா மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சோம்பை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை
சேர்த்து, கறிவேப்பிலை தூவி, நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி சிறிது
சுடுநீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்
வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, மொச்சை மற்றும் மீல்
மேக்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் சுக்கா மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து
மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான மதுரை வெஜ் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications