Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மதுரை உருளை மசாலா பொட்டலம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Madurai Urulai Masala Pottalam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு பிரியரா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மதுரை உருளை மசாலா பொட்டலம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.
இந்த உருளைப் பொட்டலம் வழக்கமாக செய்வது போன்ற சுவையில் இல்லாமல், சற்று வித்தியாசமான சுவை மற்றும் மணத்துடன் இருக்கும். இந்த ரெசிபி சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இதை ஒருமுறை செய்தால், அடிக்கடி உங்கள் வீட்டில் செய்வீர்கள்.

உங்களுக்கு மதுரை உருளை மசாலா பொட்டலம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை உருளை மசாலா பொட்டலம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3/4 கிலோ
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடலை மாவு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தை இலை
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்துவிட்டு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்ததாக கடலை மாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,
மசாலா அனைத்தும் உருளைக்கிழங்குடன் சேருமாறு ஒரு 4-5 நிமிடம் நன்கு
வதக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தை இலையை எடுத்து, அதை பொட்டலம் போன்று சுருட்டி,
அதனுள் சிறிது உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மடித்து, சணல் அல்லது
நூல் கொண்டு பொட்டலம் கட்டினால், மதுரை உருளை மசாலா பொட்டலம்
தயார்.



Click it and Unblock the Notifications