Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஒருடைம் தக்காளி சட்னியை மதுரை ஸ்டைல்-ல செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி வீட்டுல செய்வீங்க..
Madurai Tomato Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? சற்று புளிப்பாக, அதே சமயம் சற்று காரமாகவும் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் வழக்கமாக செய்யக்கூடிய சட்னி போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா?
அப்படியானால் மதுரை தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த தக்காளி சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மதுரை தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* சீரகம் -2 சிட்டிகை
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் - 1/2 மூடி
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய வரமிளகாய், தேங்காய் சேர்த்து முதலில்
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மீதமுள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து,
பொட்டுக்கடலையையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மதுரை
தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
