Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உங்களுக்கு ஒரே மாதிரி உருளைக்கிழங்கு செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்குமா? அதனால் அடிக்கடி உருளைக்கிழங்கை உங்கள் வீட்டில் செய்வீர்களா? உங்களுக்கு ஒரே மாதிரி உருளைக்கிழங்கு செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யுங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம்.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது)
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, ஓரளவாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து வெங்காயத்தைப் போட்டு ஒரு 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதக்கும் போது கரண்டியால் உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, கரம் மசாலா சேர்த்து நன்கு 5 நிமிடம் பிரட்டி வேக வைக்க வேண்டும்.
* பின் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி, 5-8 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications