Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இன்னிக்கு மட்டன் வாங்குனா.. ஒருடைம் இப்படி மதுரை ஸ்டைல் மசாலா செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அள்ளும்..
Madurai Style Mutton Sukka Masala Recipe In Tamil: விடுமுறை நாட்களில் அனைவருமே நல்ல சுவையான அசைவ உணவுகளை சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுத்துள்ளீர்களா? அப்படியானால் அந்த மட்டனை எப்போதும் போது குழம்பு மட்டும் செய்யாமல், சிறிது எடுத்து மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா மசாலாவை செய்யுங்கள். இந்த மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா மசாலா சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மட்டன் வேக வைப்பதற்கு...
* மட்டன் - 3/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 5 கொத்து
சுக்காவிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரில் கழுவிய மட்டனை எடுத்து, அதில் மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவில் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை மட்டும் சேர்த்து
நன்கு கிளறி, பின் மட்டன் வேக வைத்த நீரை ஊற்றி கிளறி, எண்ணெய்
பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மட்டன் நன்கு வெந்ததும்,
அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மதுரை ஸ்டைல் மட்டன்
சுக்கா மசாலா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











