Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
இட்லிக்கு 10 நிமிடத்தில் சட்னி செய்யணுமா? அப்ப மதுரை கார சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Madurai Style Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? 10 நிமிடத்தில் ஒரு சட்னி செய்ய வேண்டுமா? அப்படியானால் மதுரை ஸ்டைல் கார சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த சட்னியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். குறிப்பாக இது அவசர காலத்தில் செய்ய ஏற்ற சட்னியும் கூட.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 3
* பூண்டு - 8 பல்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி மிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 2 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு,
வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி, வெல்லம் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம்
நன்கு பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கினால், சுவையான மதுரை ஸ்டைல்
கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
