Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மதுரை ஸ்டைல் மட்டன் தொக்கு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...!
Madurai Mutton Thokku Recipe in Tamil: புரட்டாசி மாதம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது, கடைசி புரட்டாசி சனிக்கிழமை முடிந்து விட்டதால் பெரும்பாலான மக்கள் இந்த வாரமே அசைவ உணவுகளை சாப்பிட தொடங்கியிருப்பார்கள். எனவே அசைவப்பிரியர்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். புரட்டாசி மாதத்தின் முடிவை சிறப்பான அசைவ உணவுடன் தொடங்க விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்து அசத்த விரும்புகிறீர்களா? இந்த வாரம் வீட்டில் மட்டன் வாங்கி இந்த ஈஸியான மற்றும் சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் தொக்கை முயற்சித்துப் பாருங்கள். இந்த மட்டன் தொக்கு செய்வது மிகவும் சுலபமானது மற்றும் அட்டகாசமான சுவையுடனும் இருக்கும். இது சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சரியான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் மட்டன் தொக்கு எப்படி செய்வததென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் மட்டன் தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- மட்டன் - அரை கிலோ
- மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- சோம்பு பொடி - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க:
- பட்டை - 1
- கிராம்பு - 4
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் மட்டனை நன்கு கழுவி ஈரமில்லாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மட்டன், மஞ்சள்தூள், தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- பெரிய வெங்காயத்தை வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பட்டை பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்பு பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
- - சோம்பு பொடியை தவிர்க்க வேண்டாம். அது மட்டன் தொக்கின் சுவையை இரட்டிப்பாக்கும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 5 - 10 நிமிடம் நன்றாக கிளறவும். மட்டனில் இருந்து தண்ணீர் வரும். எனவே தண்ணிர் சேர்க்க தேவை இல்லை. உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு குக்கரை மூடி விசில் போட்டு வேக வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 20-25 நிமிடங்கள் அல்லது மட்டன் வேகும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்.
- விசில் அடங்கியதும் அடங்கியதும் மூடியை திறக்கவும். ஒருவேளை மட்டனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தண்ணீர் வற்றும் வரை குக்கர் மூடி போடாமல் கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் தொக்கு ரெடி.



Click it and Unblock the Notifications