மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபியான ஜவ்வரிசி வடையை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Madhampatty Rangaraj Special Javvarisi Vadai Recipe: மாலை வேலையில் பள்ளி முடிந்து வீட்டில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும், அவர்களின் பசியைப் போக்கக்கூடியவாறும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் குழந்தைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் சிக்னேச்சர் ரெசிபியான ஜவ்வரிசி வடையை செய்து கொடுங்கள். இந்த ஜவ்வரிசி வடை வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியவாறு இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Madhampatty Rangaraj Special Javvarisi Vadai Recipe

உங்களுக்கு ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பிரட் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஜவ்வரிசியை சுடுநீரில் சுமார் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு நீரில் பிரட் துண்டுகளை நனைத்து எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, ஜவ்வரிசியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வடை தயார்.

Image Courtesy: Traditionally Modern Food

[ of 5 - Users]
Story first published: Thursday, June 20, 2024, 17:13 [IST]
Desktop Bottom Promotion