Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வேர்க்கடலை இருக்கா? இப்படி சாதம் செஞ்சு ஸ்கூலுக்கு கொடுங்க.. செமயா இருக்கும்...
Peanut Rice Recipe In Tamil: பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ள பெற்றோர் ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசனையிலேயே இருப்பார்கள். நீங்களும் அப்படி தான் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் வெரைட்டி ரைஸ் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் எலுமிச்சை சாதம், புளி சாதம் செய்து கொடுத்து போரத்துவிட்டதா?
உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலை கொண்டு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள். இந்த வேர்க்கடலை சாதம் மதிய வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஏன், இதை வேலைக்கு செல்பவர்களுக்கும் அலுவலகத்திற்கு கொண்டு செய்யலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்=
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2-3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதை - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் பாசுமதி அரிசியை குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, 2
விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு
தட்டில் போட்டு உலர்த்த வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, கடலைப்
பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாக வறுத்து இறக்கி, தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அந்த வாணலியில் பூண்டு, கறிவேப்பலை, வரமிளகாய் ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு எள்ளு, சீரகம் ஆகியவற்றை ஒரு நிமிடம் வறுத்து இறக்கி,
அவற்றையும் குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு,
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய், பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக குளிர வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறினால்,
சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications